Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நியாயமா?

கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2012 (16:12 IST)
இல்லை தெரியாமதான் கேட்கிறேன் இது நியாயமா?

உங்க பையனோ பெண்ணோ நீங்க எதிர் பார்க்கின்ற அளவிற்கு வர வில்லை என்றால் ஒரு நிமிஷம் உங்க அட்வைஸ் மூட்டையை பக்கத்தில் வைத்து விட்டு, உங்க உருட்டல் மிரட்டல்களை ஏறக் கட்டி வைத்து விட்டு, ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசியுங்கள். "என் பிள்ளைக்கு இப்போது என்ன பிரச்னை? "

படிப்பில் ஈடுபாடு இல்லை என்றால் அதுக்கு காரணம் அவனுடைய மூளையில் இருக்கும் இரண்டு பக்ககளும் ஒரே மாதிரியாக இயங்க வில்லை என்று அர்த்தம். அவன் குழப்பமா சுற்றி கிட்டு இருந்தாலும் கூட எதாவது ஒரு வாழ்க்கை பயிற்சி முறையை, ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு முடியுமா என்று பாருங்க...
FILE

வேலூ‌ரி‌ல் நட‌ந்த மாணவ‌ர்க‌ள் ப‌யி‌ற்‌சி முகா‌ம ்!


தயவு செய்து உங்க குழந்தைகளுக்கு நீங்களே குருவா மாற முயற்சி செய்யாதீங்க. அவர்களுக்கு உங்களுடைய அருமை பெருமை எல்லாம் இந்த வயசில் கண்டிப்பாக புரியாது. நீங்களே சொல்லி புரிய வைக்கவும் முடியாது.

பிரச்சனை இதுவாக இருக்கலாம்:

ஒரு பதினைந்து வயது சிறுவன். அந்த சிறுவன் நீதான் என்றே வைத்துக் கொள்ளுவோமே.. ஸ்கூலில் படித்துக் கொண்டு இருக்கிறாய். உனக்கு முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கும் அபிராமி மேல் ஒரு கண். ஏன் அந்த கண் வந்தது? ஏன் என்றால் உன் நண்பர்கள் அனைவரும் இதை பற்றியே பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். நீ அதைப் பற்றி பேச வில்லை என்றால் நீ ஒரு கேலிப் பொருள் ஆகி விடுவாய்.

ஆகவே அதைப் பற்றி பேசும் போது உனக்குள் ஒரு கிளர்ச்சி. ஒரு நாள் வீட்டுக்கு போகிறாய். அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். உனக்கு மீசை அரும்பி விட்டது. ஆனாலும் வாழ்க்கையின் யதார்த்தம் புரியவில்லை தானே. அதனால் பயந்து தான் போயிருக்கிறாய். அடுத்த நாள் நடந்த midter mக்கு படிக்கவில்லை. அப்புறம் பள்ளியில் உன் 'கேங்'க்கும் அடுத்த 'கேங்'க்கும் சண்டை. அதில் பாதி நாள் ஓடுகிறது. உனக்கே உடலில் பல மாற்றங்கள். அதன் விளைவு மனசு தறி கெட்டு ஓடுகிறது. இன்னும் ஓராயிரம் பிரச்சனைகள். ஆனால் அதை சமாளிக்கும் வயது அனுபவமோ வரவில்லை.

இப்போது இந்த நிலையில் உனக்கு பரிட்சை வைப்பார்களாம். அதில் நீ மார்க் வாங்கனுமாம். அந்த மார்க்கை பொறுத்துதான் உன் தலைஎழுத்து. எப்படி என்றால், அந்த மார்க் தான் உன்னை எந்த காலேஜ் எடுத்துக்கும் என்று முடிவு பண்ணும். அந்த காலேஜ்ஐ பார்த்துதான் உனக்கு வேலையை தருவாங்களாம். அந்த வேலையும் அதில் நீ வாங்கும் சம்பளத்தை பார்த்துதான், உனக்கு ஒரு 'மொக்கை பிகேரோ இல்லை சூப்பர் பிகேரோ' அமையுமாம்.

ஆக உன் தலைஎழுத்தை எழுதுவது உன் மனகுழப்பங்கள் உச்ச கட்டத்தில் இருக்கும் போது நீ எடுக்கும் மார்க்குகள். சரி, நீ இப்போது கஷ்ட படறதை பார்த்தாவது உள்ளே ஒரு மாற்றம் வரணும் இல்லை? உன் பிள்ளையையும் இதே புத்தியில்லாத வட்டதில போட்டு அவனையும் படி படி என்று தொல்லை செய்து ... இது என்ன பொழப்பு ?

இல்ல, physics, chemistry, biology மட்டும் சொல்லிகொடுத்தா அவனுக்கு மன முதிர்ச்சி தானாவே முளைத்திடும் என்று எப்படி நாம் நம்பறோம்? என் புள்ள சரியா படிக்கலன்னா.. அவன் ஊர் சுற்றிகிட்டு இருக்கானா.. என் பொண்ணு சதா சர்வ காலமும் கண்ணாடி முன்னாடியே நின்று பார்த்துட்டு இருக்காளா? SMS, FaceBook என்று உட்கார்ந்து இருக்காளா? நான் அவளை நாள் முழுதும் ஓயாம திட்டி தீர்த்தால் மட்டும் நான் எதிர் பார்க்கிற மாற்றம் வந்து விடும் என்று நினைப்பது அஹங்காரம் என்றால், அந்த மாற்றம் வராத போது, கோபப்படுவது, அந்த குழந்தை மேலேயே பழி போட்டு குற்றவாளி ஆக்குவது அறிவு கெட்டதனம் இல்லையா?

ஆகவே...

மனித மூளையில இருக்கின்ற ஒரே ஒரு செல் ஒரு கணிப்பொறிக்கு சமம். அப்படிஎன்றால் உங்களுடைய பிள்ளைகளின் மூளையில் ஒரு கோடியே ஒரு கோடி செல்கள் இருக்கின்றன. (இந்த எண்ணிக்கையை தொடும் அளவிற்கு யாரும் ஊழல் பண்ணவில்லை!) அப்படி பட்ட மூளையை வைத்திருக்கும் மகனை போய் "மக்கு, மண்ணாந்தை" என்று சொல்லுவது எல்லாம் மகா பாவம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments