Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பூண்டு

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (13:17 IST)
பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன.



இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.

1. பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

2. அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

3. பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

4.பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

5. பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்பை கரைத்துவிடும்.

6. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்மந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு உதவுகிறது.

7. பூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவிடும்.




 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்