‌‌சி‌ர‌ிப்பு வெடி

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:40 IST)
‌ தீபாவ‌ளிய‌ன்று வெடிக‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌‌சி‌ர‌ிப்பு வெடிகளு‌ம்தா‌ன்...

தீபாவளி இனாம்!

webdunia photoWD
" நம்ம வீட்டு வாசலிலே இருக்கிற பட்டாசுக் குப்பையைப் பார்த்தால் பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு கொளுத்தியிருப்போம் போலிருக்கே?"
" வேறு தெருவிலிருந்து பட்டாசுக் குப்பையைக் கொண்டு வந்து கொட்டிட்டுப் போயிருக்காங்க. இனாம் தர மாட்டேன்னு சொல்லிட்டீங்களில்லையா?"

தீபாவளி சட்டை

" உங்க அப்பா தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த சட்டை சாயம் போயிட்டுது பார்."
" உங்க சாயம் கூடத் தான் போயி‌டி‌ச்‌சி. நீங்க அசல் பி.இ. இல்லையாமே.. டிப்ளமா தானாமே?"

சைக்கிள் செயின் தீபாவளி

( ரௌடியின் வீட்டில்) "அப்பா! தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு ஒரு பழைய செயின் வேணுமாம்?"
" பழைய செயினு எதுக்கும்மா?"
" அது தான் நல்லா வாட்டமா வீச முடியுமாம்." (சைக்கிள் செயின்)

பட்டுப்புடவை தீபாவளி

webdunia photoWD
" உங்களைத் தானே? வீட்டிலே எல்லாருக்கும் பட்டுப்புடவை எடுத்திட்டோம். வேலைக்காரி கண்ணம்மாவுக்கும் செலவோடு செலவா ஒண்ணு எடுத்துடுங்க."

" சும்மா இருடி. போன மாசம் தான் ரெண்டு பவுனுக்கு வளையல் பண்ணிப் போட்டேன்!"

வெடியோ காஸெட்!

வெளி வந்து விட்டது வெடியோ காஸெட்!
பட்டாசு வெடிகளின் டம் டமால் பயங்கர சத்தம். புகை வாணங்களின் சீரல். ஏரோப்ளேன் வாகணங்களின் உய்ய்ய் ஒலிகள். அனைத்தும் அபார முறையில் பதிவு செய்யப்பட்ட காஸெட்! ஆபத்தான குடிசைப் பகுதிகளில் கூடத் தைரியமாக டேப் போடலாம். உடனே வாங்குங்கள்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments