Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (07:24 IST)
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய ரசிகர்களை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கண்டித்தார். 
 
நேற்றைய போட்டியின்போது விராத்கோஹ்லி அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவருடைய பேட்டிங்கை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அவ்வப்போது ஃபீல்டிங்கை மாற்றி கொண்டிருந்தார். அவ்வாறு ஒருமுறை ஃபீல்டிங் மாற்றம் செய்து கொண்டிருந்தபோது எல்லைக்கோட்டிற்கு அருகே இருந்த இந்திய ரசிகர்கள் சிலர் ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்து அவருக்கு எதிராக கூச்சல் போட்டனர். இதனால் ஸ்மித் அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த விராத் கோஹ்லி, உடனே இந்திய ரசிகர்களை நோக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்ய வேண்டாம் என்று கண்டித்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கும் சேர்த்து கைதட்டுங்கள்' என்று சைகை மூலம் கூறினார். விராத் கோஹ்லியின் இந்த விசாலமான மனதிற்கு உலக கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித்தும் விராத் கோஹ்லியின் முதுகில் தட்டி கொடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments