Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs இங்கிலாந்து… பாகிஸ்தான் ரசிகர்க்ள் ஆதரவு யாருக்கு ? – வீரரின் கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் பதில்கள் !

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (15:58 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது.

இந்தியா இதுவரை இந்த உலகக்கோப்பையில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 –ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கெதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஏற்கனவே அரையிறுதிக்கு ஆஸி அணி முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவுக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உள்ளதால் இந்தியா தகுதிப் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இந்தியா அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்க்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க வேண்டி வரும். அப்படி இங்கிலாந்து தோற்றால் அது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு வாய்ப்பாக அமையும். அதனால் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாக் மற்றும் இலங்கை ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் போட்டியை ஒட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் டிவிட்டர்ல் ‘ பாகிஸ்தான் ரசிகர்களே… இந்தியா, இங்கிலாந்து… உங்கள் ஆதரவு யாருக்கு எனக் கேள்வி எழுப்பினார்’ அதற்குப் பதிலளித்த பாக் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கேத் தங்கள் ஆதரவு எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் இன்னிங்ஸைப் பார்த்தது போல இருந்தது.. கோன்ஸ்டாஸைப் பாராட்டிய ஆஸி முன்னாள் வீரர்!

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

பும்ரா பந்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்ஸர்… அடித்து நொறுக்கிய இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments