இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆஸ்.,வீரர்கள் 6 பேருக்கு ஓய்வு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:54 IST)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
ஐசிசி உலகக் கோப்பை தொடர்  நிறைவடைந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா மற்றும் கேப்டன் மேத்யூ வேர்ட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர்  இந்தியாவில் நடந்து வருகிறது.
 
இதில், முதல்போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து விசாகபட்டினத்தில் நடந்த போட்டியிலும் இந்தியா வென்றது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
அதன்படி, ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல்,  ஷான் அபாட், ஜாஷ் இங்கிலிஸ், மார்க்ஸ் ஸ்டாய்னஸ் ஆகிய ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களுக்குப் பதிலாக, பென் மெக்டர்மோட், ஜாஷ் ஃபிலிப், கிரில் க்ரீன், பென் த்வர்ஷுயில் ஆகியோர் மீதமுள்ள 3 போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments