Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆஸ்திரேலிய தொடரின் வெற்றியை இவர்களே நிர்ணயிப்பார்கள் – ஜாகீர் கான் கருத்து!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (15:32 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் தொடரின் வெற்றியை பந்துவீச்சாளர்களே தீர்மானிப்பார்கள் என ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முதலில் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக மைதானத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் பந்துவீச்சாளார் ஜாகிர் கான் ‘இந்த தொடரில் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் பந்துவீச்சாளர்களே. ஏனென்றால் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. கடந்த 2018 -2019 ஆம் ஆண்டு தொடரின் போது இந்திய 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அப்போது ஸ்மித் மற்றும் வார்னர் இல்லை. இப்போது அவர்கள் இருப்பதால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments