Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆலோசகர் ஆகும் முன்னாள் இந்திய வீரர்!

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:39 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர். சஞ்சீவ் கோயங்கா புனே அணியின் உரிமையாளராக இருந்தபோது, தோனியையும் இப்படிதான் அவமானப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலகினார். இந்நிலையில் இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக ஜாகீர் கான் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜாகீர் கான் இந்திய அணிக்காக 400 சர்வதேச போட்டிகள் வரை விளையாடியவர். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மும்பை மற்றும் டெல்லி போன்ற அணிகளுக்காக விளையாடி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments