“நல்ல நேரம் வர இருக்கிறது….” பூம்ரா சொன்ன குட் நியூஸ்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:07 IST)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து இப்போது விலகியுள்ளார்.

ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரை இழந்துள்ளார்.

அடுத்து நியுசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் போட்டித் தொடர்களிலும் அவர் பெயர் இல்லை.  பூம்ராவின் உடல்நிலைக் குறித்து கடந்த மாதம் பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா “அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை. முன்னர் அவரை அவசரப்படுத்தியதால் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். அவரை எங்களின் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது  பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பயிற்சியில் விராத் கோஹ்லி..!

ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments