Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னதான் ஆச்சு நம்ம பூம்ராவுக்கு… எப்பதான் அணிக்கு திரும்புவார்?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:18 IST)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக 6 மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர்  பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக ஆஸி. அணியோடு நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கப்படலாம் என சொல்லப்பட்ட நிலையில், அந்த போட்டிகளுக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில்தான் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆண்டில் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுவ்ராஜ் தந்தையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!

ஓய்வை அறிவித்த நியுசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்!

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments