Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னப்பம்பட்டியில் சர்ச்சை... நடராஜனை வரவேற்பதில் சிக்கல்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (15:09 IST)
இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பந்து வீச்சாளராக சென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். ஆனால் அடுத்தடுத்து முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, அதன் பின்னர் டி20 போட்டிகளில் பந்துவீச்சில் அசத்திய நடராஜனுக்கு நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
 
இதனை அடுத்து ஒரே தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்ப இருக்கும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது சொந்த ஊரை சேர்ந்த சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.
 
ஆனால், கொரோனா பரவும் அச்சத்தால் சிரப்பு வரவேற்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சேலம் சின்னப்பம்பட்டியில் அமைக்கப்பட்ட பாராட்டு விழா மேடை அகற்றப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments