Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது - கவாஸ்கர் புகழாரம்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:16 IST)
விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதோடு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் (115, 141) சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் பல சாதனைகளை அந்த ஆட்டத்தில் அவர் புரிந்திருந்தார்.
 
விராட் கோலியின் சாதனைகள்...
 
இது குறித்து அவர் கூறும்போது, ”ஆஸ்திரேலிய தொடரில் தோனி தான் கேப்டன். இதனால் கேப்டன் பதவி எந்த கேள்வியும் எழுப்ப தேவையில்லை. எஞ்சிய 3 டெஸ்டுக்கும் தோனி தான் தலைவர். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுளள்ளார். வீராட் கோலி தொடர்ந்து கேப்டனாக இருக்க வேண்டும் என்று தேர்வு குழு தோனியிடம் சொன்னது கிடையாது.
 
கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையில் தவறு இல்லை. ஆனால் ரோகித்சர்மா ஆட்டம் இழந்தபிறகு டிராவுக்காக ஆடி இருக்க வேண்டும். வெற்றி பெற முடியாத பட்சத்தில் ஆட்டத்தை ‘டிரா’ செய்வதே சிறந்ததாகும்.

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

Show comments