Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசை பட்டியல் வெளியீடு: கேப்டன் தோனி, கோலி சறுக்கல்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (10:23 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா டாப் இடத்தை பிடித்துள்ளது. மேலும் 2 ஆவது இடத்தை இந்தியாவும், 3 ஆவது இடத்தை தென் ஆப்பிரிக்காவும், 4 ஆவது இடத்தை இலங்கையும், 5 ஆவது இடத்தை நியூசிலாந்தும் இடம்பெற்றுள்ளது.
மேலும் பேட்டிங் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் முதல் இடத்தை பிடித்தார். 2 ஆவது இடத்தில் அம்லா நீடிக்கிறார். உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதன் மூலம் இலங்கையின் சங்ககாரா 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் 3 ஆம் இடத்திலிருந்த கோலி சற்று இறக்கம் கண்டு 4 ஆவது இடத்தை பிடித்தார். 8 ஆவது இடத்திலிருந்த கேப்டன் தோனியும் இறக்கம் கண்டு 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 16 ஆவது இடத்திலும், ரெய்னா 20 ஆவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தானின் சயித் அஜ்மல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  2 ஆவது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரேன் பிடித்துள்ளார். மேலும் இந்தியாவின் முகமது ஷமி 11 ஆவது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார். தமிழக வீரரான அஸ்வின் 16 ஆவது இடத்தில் உள்ளார். புவனேஸ்வர் குமார் 17 ஆவது இடத்திலும், ஜடேஜா 18 ஆவது இடத்திலும் உள்ளனர். டாப் 10 பந்து வீச்சாளர்களில் இந்திய வீரர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments