யாரும் முறியடிக்காத டிவில்லியர்ஸின் அரிய டெஸ்ட் சாதனை!

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (14:13 IST)
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். 
 
பந்தை மைதானத்தின் எல்லா பக்கமும் அடிக்கக்கூடிய அதிரடி வீரர் என்பதால் ரசிகர்கள் இவரை மிஸ்டர் 360 என்று செல்லமாக அழைப்பார்கள். இந்நிலையில், டிவில்லியர்ஸின் அரிய டெஸ்ட் சாதனை ஒன்று வெளிப்பட்டுள்ளது. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற  டெஸ்ட் போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இரண்டாவது இன்னிங்சில் 117 பந்துகளில் 103 நாட் அவுட் என்று சதம் எடுத்தார். 
 
இதே போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பராக 6 கேட்ச்களையும், 2 வது இன்னிங்சில் 5 கேட்ச்களையும் பிடித்து ஒரே டெஸ்ட் போட்டியில் 11 பேரை ஆட்டமிழக்க செய்ததுடன் சதமும் கண்டு ஒரு தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.  
 
11 பேரை ஆட்டமிழக்க செய்த விக்கெட் கீப்பர் என்ற வகையில் ஜாக் ரஸ்ஸல் சாதனையை சமன் செய்துள்ளார் டிவில்லியர்ஸ். ஆனால், இவரது இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments