Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிரனா பந்து வீச அனுமதி மறுத்த நடுவர்கள்… தோனி வாக்குவாதம் – நடந்தது என்ன?

Webdunia
புதன், 24 மே 2023 (09:01 IST)
நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் ஒன்று போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெருமை பெற்றதோடு 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சென்னை அணி பந்துவீசிய போது சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது. அதற்குக் காரணம் நடுவர்கள் பதிரனா பந்துவீச அனுமதி மறுத்ததுதான். போட்டியில் 12 ஆவது ஓவரை வீசிவிட்டு ஓய்வெடுக்க டக்கவுட்டுக்கு சென்று விட்டார் பதிரனா. பின்னர் 9 நிமிடம் கழித்து வந்து 16 ஆவது ஓவரை வீச வந்தபோதுதான் அவரை பந்து வீச அனுமதி மறுத்தனர் நடுவர்கள்.

இதற்குக் காரணம் எந்த ஒரு வீரரும் ஓய்வெடுக்க சென்றால் 8 நிமிடத்துக்குள் திரும்ப வந்துவிட வேண்டும். அப்போதுதான் அவர் தொடர்ந்து பந்துவீச முடியும். ஆனால் பதிரனா 9 நிமிடம் கழித்துதான் களத்துக்கு வந்தார். இதற்கிடையே சிஎஸ்கே கேப்டன் தோனி நடுவர்களிடம் விவாதம் செய்து பின்னர் பதிரனாவை பந்துவீச வைத்தார். இதனால் போட்டி ஒரு நிமிடம் தடைபட்டு பின்னர் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments