பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமும் விலக, அவருக்கு பதில் ஷாகின் அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்களாக உமர் குல் மற்றும் சயித் அஜ்மல் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியோடு டெஸ்ட் தொடரை டிசம்பர் மாதத்தில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments