Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? – டெல்லி Vs மும்பை இன்று மோதல்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:32 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோத உள்ளன.

இதுவரை தலா 6 ஆட்டங்கள் விளையாடியுள்ள இரு அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் வெற்றிபெற்று தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் சுற்று இன்றோடு முடியும் நிலையில் இன்று முதல் இடத்தை அடைவதற்கு மும்பை இந்தியன்ஸும், முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள டெல்லி கேப்பிட்டல்ஸும் பல பரீட்சை செய்ய உள்ளன.

இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல வலுவில் உள்ளன. டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா, ரபாடா, ஹெட்மெயர், ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல மும்பை அணியிலும் பாண்ட்யா, பொல்லார்ட், பேட்டின்சன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்று இந்த இரு அணிகளின் ஆட்டத்தில் சேஸிங் இலக்கு 200 ஐ தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments