Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஃபார்முக்கு வந்துவிட்டால் அதிரடி ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாது’ - தோனி

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (18:26 IST)
’ஃபார்முக்கு வந்துவிட்டால் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், பிரண்டன் மெக்கல்லம் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாது என்று இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ் கெய்லை விரைவில் ஆட்டமிழக்கச் செய்ய திட்டம் எதுவும் உள்ளதா? என்று இந்திய அணித் தலைவர் தோனியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதலளித்த தோனி, ‘கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் அல்லது பிரன்டன் மெக்கல்லம் போன்ற வீரர்களை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த திட்டம் என்னவெனில், எந்த திட்டமும் இல்லாமல் இருப்பதுதான்’ என்று பதிலளித்தார்.
 

 
மேலும் அவர் கூறுகையில், ‘வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், இவர்கள் தனி நபர்களாக வந்து சிக்சர்களை நொறுக்கத் தொடங்கி விட்டால், அதனை தடுத்து நிறுத்தவே முடியாது.
 
கிறிஸ் கெய்லுக்கோ அல்லது டி வில்லியர்ஸுக்கோ பௌவுலர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல், சுதந்திரமாக புதுவித சிந்தனையுடன் பந்துவீச விடுவதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றபடி இதை செய்தால் இப்படி நடக்கும் என்று திட்டமிட்டு அவர்களுக்கு எதிராக செய்ய முடியாது’ என்றார்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments