Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை கிங்ஸ் அணி!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (23:30 IST)
சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிஃபயர் 1 போட்டி  நடைபெற்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, சென்னை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ருதுராஜ் 60ரன்னும்,  கான்வே 40ரன்னும், ரஹானே 17 ரன்னும், ஜடேஜா22 ரன்னும் அடித்தனர். 20  ஓவர்கள் முடிவில், அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து குஜராத் அணி பேட்டிங் செய்தது. அதில், சுப்மன் கில் 42 ரன்னும், ரஷித் கான் 30 ரன்னும், ஷனகா 17 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில்  157 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி தரப்பில், ஜடேஜா, தீக்‌ஷனா, ஷாஹர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எனவே, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments