Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அடிப்படை திட்டம்” - விராட் கோலி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (18:47 IST)
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அடிப்படை திட்டம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
 

 
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில்தான் விராட் முழுமையாக கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து கூறிய விராட் கோலி, “இது எனக்கு முழு டெஸ்ட் தொடர். சில திட்டங்களை மனதில் வைத்திருக்கிறோம். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் சில புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.
 
இந்த போட்டிகளில் இருந்து நேர்மறையாக கற்றுக்கொள்ள முடிந்தால், சில இடங்களில் தேவையான முன்னேற்றத்தை கொண்டால் அது நல்ல நாளாக இருக்கும். கேப்டனாக செயல்படுவதற்கு எப்போதும் அணிக்கு நிறைய நேரமும், நிறைய ஆட்டங்களும் தேவைப்படும்.
 
எனவே, நான் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். எனக்கு மட்டுமல்ல, என்னை போன்று புதிய இந்திய அணிக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நாங்கள் கடந்த ஐந்து, ஆறு நாட்களாக நல்ல பயிற்கியில் ஈடுபட்டு வந்துள்ளோம். ஏன், நேற்றுகூட எந்நேரமும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டோம். வீரர்கள் நல்ல முறையில் தயாராகி உள்ளனர்.
 
20 விக்கெட்டுகளை வீழ்த்துவதை முக்கிய திட்டமாக வைத்துள்ளோம். இதுதான் வெற்றி பெறுவதற்குரிய ஒரே வழி. 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் திட்டத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ஆனால், அழுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க பொறுப்புடன் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அதிகளவில் ரன் குவித்து அவசியம்” என்று கூறியுள்ளார்.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments