Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் சாம்பியன்ஷிப் : விராட் கோலி புதிய சாதனை....

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (22:21 IST)
இந்திய அணியின் கேப்டன்  டெஸ்ட் கிரிக்கெட்டில்  புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் இன்று செளதாம்டனில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தற்போது பேட்டிங் செய்து வரும் விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங் திறமையால் 7,500 ( 154 இன்னிங்ஸ் )  ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது 154 இன்னிங்ஸில் இதை அடித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் என அழைக்கப்படுபவருமான சச்சின் இந்த இமாயல ரன்களை தனது 144 வது இன்னிங்ஸில் அடித்தார்.

மேலும், 7,500 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள் சாதனையாளர்கள் வரிசையில் கோலி 9 வது இடம் பிடித்துள்ளார். கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments