Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:28 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நின்றது. அரசியல் காரணங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பைக்காவும் பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து சொல்லி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதாம். இது சம்மந்தமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments