Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டி : ஜிம்பாப்வே வெற்றி

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (20:09 IST)
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான நடைபெற்ற டி 20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது


 

 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சிபாபா மற்றும் மசகட்ஸா இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். பின்னர், சிபாபா 20 ரன்களிலும், மசகட்ஸா 25 ரன்களிலும் வெளியேறினர்.
 
அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா மற்றும் வால்லர் தங்களது பங்கிற்கு முறையே 20 மற்ற்றும் 30 ரன்கள் குவித்து வெளியேறினர். பின்னர், களமிறங்கிய சிகும்பரா இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 54 ரன்கள் குவித்தார்.
 
20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி  6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், அக்‌ஷர் பட்டேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா அணி, 6 விக்கெட் இழப்பிற்கு, 168 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிக பட்சமாக பாண்டே 48 ரன்களும், மந்தீப் சிங் 31 ரன்களும் எடுத்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments