Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக கோப்பை: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி ரத்து !

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:23 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் டி-20 உலகக் கோப்பை தொடர் நடந்து வரும்  நிலையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த  நிலையில், மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது டி-20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு மழை அடிக்கடி குறிக்கிடுவதால், போட்டி தொடங்குவதிலும், போட்டிககளுக்கு இடையேயும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த  நிலையில், இன்றைய  சூப்பர் 12 சுற்றில்  மெல்போர்ன் மைதானத்தில் பிற்பகல் 1;30 மணிக்கு  இங்கிலாந்து –ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி நடக்க இருந்த நிலையில் மழையின் காரணமாக டாஸ் போட தாமதம் ஆனது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழையால் இன்றைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு,  இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலையிலும் மெர்போர்னில் மழையால், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் இந்த அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments