Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தார் குட்டி டி வில்லியர்ஸ்; குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2015 (18:35 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான டி வில்லியர்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து குவிந்து வருகின்றன.
 

 
கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி வில்லியர்ஸ் தற்போது ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இதற்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 
 
அந்த வாழ்த்துச் செய்தியில், ”புதன்கிழமை அதிகாலை டி வில்லியர்ஸ் மற்றும் டேனியல்லே டி வில்லயர்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.


 
 
இது குறித்து ஏபி டி வில்லியர்ஸ், “நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றி உணர்வோடும் இருக்கிறோம். தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். இருவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
 
அவருக்கு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும், ரசிகர்கள் ஏராளமானோரும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
 
தென்னாபிரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டி வில்லியர்ஸின் மனைவி டேனியல்லே நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

Show comments