Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளராக இருப்பார் - பிரெட் லீ

Webdunia
புதன், 27 மே 2015 (17:38 IST)
சவுரவ் கங்குலி மிகச்சிறந்த இந்திய அணி பயிற்சியாளராக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
 
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. மேலும், இந்திய அணி அடுத்த மாதம் 7ஆம் தேதி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
 

 
இதனால் பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய ஆலோசனை செய்து வருகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரெட் லீ, “சவிரவ் கங்குலி நிச்சயம் பயிற்சியாளர் பணியை சிறப்பாக செய்வார் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் நிறைய டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. அந்த அனுபவம் திறமையாக செயல்பட உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
 

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments