Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளிலும் துணைக் கேப்டன் பொறுப்பு… ஷுப்மன் கில்தான் எதிர்கால கேப்டனா?

vinoth
சனி, 27 ஜூலை 2024 (09:52 IST)
நடந்து முடிந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கூட தேர்வாகாத ஷுப்மன் கில் தற்போது ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர்தான் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக வரப்போகிறார் என்பதை நாம் சூசகமாக புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் டி 20 போட்டிகளில் ஆட்ட அணுகுமுறை அதிரடியாக மாறி வரும் நிலையில் அவருடைய நிதானமான பேட்டிங் போக்கு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் பற்றி பேசியுள்ள அவர் “டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக சில போட்டிகளில் என்னுடைய பேட்டிங் எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த உலகக் கோப்பைக்குள் குறைந்தது 30 போட்டிகளில் நாங்கள் விளையாடவுள்ளோம். அதற்குள் என்னுடைய பேட்டிங்கை மெருகேற்றுவேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் பும்ரா துணைக் கேப்டன் பொறுப்பு வகித்து வந்த நிலையில் கில்லுக்கு மாற்றப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments