Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தோம்… மும்பை பேட்ஸ்மேன்கள் தவறு செய்தார்கள்- குஜராத் கேப்டன் சுப்மன் கில்!

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (07:38 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் சேர்த்தது.

இந்த இலக்கை துரத்திச் சென்ற மும்பை இந்தியன்ஸ் கடைசி கட்டம் வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் குறைவான இலக்கை ட்ஃபண்ட் செய்ய குஜராத் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

போட்டிக்குப் பின்னர் பேசிய குஜராத் கேப்டன் கில் “இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனாலும் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாகவே அடித்திருந்தோம். ஆனால் பவுலிங்கில் தொடர்ந்து மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தோம். அதனால் அவர்கள் சில தவறுகளை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுபோலவே நடந்தது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

சிட்னி டெஸ்ட்டை வென்ற ஆஸ்திரேலியா… சுக்கு நூறானது இந்தியாவின் WTC இறுதிப் போட்டி கனவு!

இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

வடிவேலு போல பாக்கெட்டை வெளியே எடுத்துக் காட்டிய கோலி.. ஆஸி ரசிகர்களோடு தொடரும் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments