Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார் சோயிப் மாலிக்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (06:53 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் 5 அண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
பாகிஸ்தான் அணியின் நம்பிக்க நட்சத்திரமாகவும், கேப்டனாகவும் ஜொலித்தவர் சோயிப் மாலிக். மோசமான பார்ம் காரணமாக  தொடர்ந்து அல்லல்பட்டு வந்த மாலிக்குக்கு பாகிஸ்தான் அணி கல்தா கொடுத்தது.
 
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சோயிப் மாலிக் மீண்டும் அணியில் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். மாலிக்கின் இந்த விடாமுயற்சிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாதம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள்  மூன்று டெஸ்ட், 4 ஒருநாள்  மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் மோத உள்ளன.
 
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் பட்டியலையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  இந்த அணியில் 16 வீரராக சோயிப் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

Show comments