Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:16 IST)
நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வதுதான். ஏனென்றால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள். இதனால் அணியில் யாரை எடுப்பது என்ற குழப்பம் ஏற்படும்.

இந்நிலையில் இந்திய அணியில் ஷிவம் துபே கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் சிவம் துபேதான். அவர் யுவ்ராஜ், தோனி போல அபாயகரமான வீரர். அவர் அணியில் இருந்தால் நம்மால் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக இலக்கு நிர்ணயிக்க முடியும். ஆனால் ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெற்றால் நாம் ஒரு ஆல்ரவுண்டரை இழக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் ஜடேஜா, பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே என மூன்று ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருப்பதால் அவர்களில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் கேப்டனுக்கு தலைவலியாக இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments