Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் அவர்தான் தொடக்க ஆட்டக்காரர்… கோலி உறுதி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:49 IST)
ஒருநாள் போட்டிகளில் ஷிகார் தவானும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் வழக்கமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் மூன்றாவது வீரராகக் களமிறங்குவார். ஆனால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி 20 தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய 80 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்தபின்னர் பேசிய அவர் ‘இனிமேல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கலாம் என இருக்கிறேன். ரோஹித்துடன் விளையாடுவது சிறப்பாக இருக்கும். ஐபிஎல் தொடரிலும் ஓபனிங்க்தான் விளையாட உள்ளேன். நான் அல்லது ரோஹித் களத்தில் இருந்தால் இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் உணர்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தவான்தான் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித்தோடு விளையாடுவார் என கூறியுள்ளார். மேலும் கூறிய அவர் ‘அவர்கள் இருவரும் கடந்த ஆண்டுகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் சம்பளம்… ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற ராஷ்மிகா!

இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு… கம்பீருக்கு இன்று சம்பிரதாய நேர்காணல்!

மூக்கை உடைத்த ஆஸ்திரிய வீரர்! எம்பாப்வே-ஐ வெளியே போக சொல்லி கூச்சல்! – EURO கால்பந்து போட்டியில் பரபரப்பு!

கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!

இவர்தான் ஒரிஜினல் ரன் மெஷின்?? ஒரு ஓவரில் 36 ரன்கள் கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments