Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களை இப்படியா நடத்துவது?... முதல்வர் தலையிட வேண்டும்… ஷிகார் தவான் கோரிக்கை!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:52 IST)
உத்தர பிரதேசத்தின் ஷாகரன்பூரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் மாநில அளவிலான 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீராங்கனைகள் வந்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுநீர் கழிக்கும் சிங்க் அருகே தட்டில் உணவு வகைகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு பதார்த்தம் வெறும் பேப்பரில் தரையில் வெறுமனே வைக்கப்பட்டு இருந்தது. வீராங்கனைகளும், உடன் வந்தோரும் வேறு வழியின்று அவ்வுணவை சாப்பிட எடுத்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இந்தியா முழுவதும் தற்போது விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் அதைப் பகிர்ந்து “வீரர்கள் கழிவறையில் அமர்ந்து உணவு சாப்பிடுவது நெஞ்சைப் பதறவைக்கும் விதமாக உள்ளது. உடனடியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments