Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஆயிட்டாரே ஷிகர் தவான்: மீண்டும் ஆட்டத்திலிருந்து விலகினார்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (09:41 IST)
ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் காயம் பட்ட ஷிகார் தவான் நியூஸிலாந்து போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகார் தவான். கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டு ஆட்டத்திலிருந்து விலகினார். பிறகு தொடர்ந்து அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதும், காயம் பட்டு ஆட்டத்திலிருந்து விலகுவதுமாக இருந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான ஆட்டத்தில் மீண்டும் காயம்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலகினார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா மோதவிருக்கும் சூழலில் அந்த அணியிலிருந்து விலகியுள்ளார் ஷிகார் தவான்.

இப்படி தொடர்ந்து அவர் காயம்படுவதும், வெளியேறுவதுமாக இருப்பது நல்லதல்ல என கிரிக்கெட் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஷிகர் களம் இறங்குகிறார் என்றாலே ஆர்வத்தோடு பார்த்த ரசிகர்கள் இப்போது அடிபடாமல் திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments