இந்திய அணியின் முதுகெலும்பு கோலி… நான் அவரது ரசிகர்- பாக் பந்துவீச்சாளர் கருத்து!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:37 IST)
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி தான் கோலியின் ரசிகர் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவை ஐசிசி தொடரில் வென்றது. இந்த போட்டியில்ச் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய பேட்டிங் தூண்களை சாய்த்தார். இந்திய அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற பாகிஸ்தான் அணியுடனான தோல்வி முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த போட்டி குறித்து பேசியுள்ள ஷாகீன் அப்ரிடி ‘எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாடினார்கள். எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் விளையாடிய விதம் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது. நான் வீசிய எண்டில் லெக் பகுதியில் பவுண்டரி எல்லை சிறியதாக இருந்தது. நான் வேகமாக வீசி இருந்தால் கோலி ரன் அடித்திருப்பார். ஆனால் நான் வேரியேஷன் காட்டியதால் எனது நல்ல நேரம் அவர் அவுட்டானார். கோலிதான் இந்தியாவின் முதுகெலும்பு. நான் அவரின் ரசிகன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments