Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஐதராபாத் பிரியாணியை சாப்ட்டு எங்க ஆளுங்க ரொம்ப ஸ்லோவாயிட்டாங்க…” – ஷதாப் கான் ஆதங்கம்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (14:49 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி (நாளை) தொடங்கவுள்ள நிலையில் இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் போட்டியாக ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது.

அதே போல நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் தோற்றது. பாகிஸ்தான் அணியில் பீல்டிங் மிக மோசமாக இருந்ததும் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. இது பற்றி பேசியுள்ளார் நேற்று பாகிஸ்தான் அணியை வழிநடத்திய ஷதாப் கான்.

இதுபற்றி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் பேசும்போது “நாங்கள் தினமும் ஐதராபாத் பிரியாணியை சாப்பிடுகிறோம். அதனால் எங்கள் வீரர்கள் மந்தமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments