சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

vinoth
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (13:37 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் ஒரு முக்கியமான சாதனையைத் தகர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் சேர்த்த வீரரென்ற சாதனையை சச்சின் தன்வசம் வைத்திருந்தார். தற்போது ரூட் அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஜோ ரூட் 1630 ரன்கள் சேர்த்துள்ளார். சச்சின் 1625 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments