Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து சச்சின், கம்பீர், யுவராஜ் சிங் அதிரடி நீக்கம்

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2014 (13:12 IST)
பிசிசிஐ-யின் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், அதிரடி ஆட்டக்காரர் யவராஜ் சிங் ஆகியோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
 
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இவர்களில் தரம் வாரியாக பிரித்து ‘ஏ’ கிரேடில் இடம் பிடிப்பவருக்கு ரூ.1 கோடியும், ‘பி’ கிரேடில் இடம் பெறுபவருக்கு ரூ.50 லட்சமும், ‘சி’ கிரேடில் இடம் பெறுபவருக்கு ரூ.25 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

 


 
அதேபோல், இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் விரர்களின் ஒப்பந்த பட்டியல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய கவுதம் கம்பீர், அந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
 
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பிரிவில் எலைட் குரூப் எனப்படும் ஏ கிரேடில், கேப்டன் மகேந்திர சிங் டோனி, துணை கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின், மற்றும் புவேனேஷ் குமார் இடம் பெற்றுள்ளனர்.
 

 
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதையடுத்து, சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
”பி” பிரிவில், முரளி விஜய், ரவீந்தர் ஜடேஜா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, முகம்மது சமி, அஜிங்கியா ரகானே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments