Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சொல்லியும் கேட்காத ருத்துராஜ்… ரஹானேவை நீக்கி அதிரடி முடிவு!

vinoth
திங்கள், 13 மே 2024 (15:03 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர் சி எஸ் கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதாகவும், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி கலவையாக விளையாடி வருகிறது. அந்த அணி ப்ளே ஆஃப் செல்லவேண்டுமென்றால் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டும்.

சி எஸ் கே அணியின் கேப்டன்சியில் ஆரம்ப சில போட்டிகளில் தோனி, ருத்துராஜுக்கு உதவி செய்தாராம். ஆனால் அதன் பிறகு முக்கியமான முடிவுகளை ருத்துராஜையே எடுக்க சொல்லிவிட்டாராம்.  பீல்டிங் மாற்றம் பற்றி வேண்டுமானால் தான் 50 சதவீதம் உதவி செய்வேன் என்றும் ஆனால் இறுதி முடிவு உன்னுடையதாகதான் இருக்கவேண்டும் எனக் கூறிவிட்டாராம்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானேவை அதிரடியாக நீக்கினார் ருத்துராஜ். ஆனால் தோனி அவருக்கு இந்த சீசன் முழுக்க தொடர்ந்து வாய்ப்பளிக்க சொல்லியிருந்தாராம். ஆனாலும் இறுதி முடிவாக ருத்துராக் ரஹானேவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments