Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கேப்டன்களில் இந்த சாதனையைப் படைத்தது ரோஹித் ஷர்மா மட்டும்தான்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (10:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து ஆடிய இந்திய அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று சதமடித்து அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து செல்ல உதவினார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் ரோஹித் அடித்த முதல் சதம் இதுவாகும்.

மேலும் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டி என மூன்று வடிவிலும் கேப்டனாக சதமடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று வடிவிலும் கேப்டனாக செயல்பட்ட கோலி மற்றும் தோனி ஆகிய இருவர் கூட இந்த சாதனையைப் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments