Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை மட்டும் குற்றம்சாட்டுவது நியாயமற்றது.. முன்னாள் வீரர் ஆதரவு!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (09:07 IST)
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸில் பல வருடம் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து விளையாடியவருமான ஹர்பஜன் சிங் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர் "ரோஹித் விமர்சிக்கப்படும் விதத்தில், மக்கள் சற்று அதிகமாகப் போவதை நான் காண்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, ஒரு நபர்  மட்டும் உங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. பிசிசிஐயின் ஆதரவை ரோஹித் பெற வேண்டும். அவர் எந்த அளவுக்கு ஆதரவைப் பெறுவார் என்று எனக்குத் தெரியவில்லை இருப்பினும் அத்தகைய ஆதரவைப் பெறுவது சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க அவருக்கு உதவும்.” என ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments