எல்லை மீறி ஹர்திக் பாண்ட்யாவை டார்ச்சர் செய்த ரசிகர்கள்… ரோஹித் ஷர்மாவின் எதிர்ப்பு!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:28 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அன்று முதல் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி இரண்டையுமே தோற்றுள்ளது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அவர் மைதானத்தில் இருக்கும்போதோ, பேட் செய்யும் போதோ அவரை வெறுப்பேத்தும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுவிட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை ஃபீல்ட் செய்த போது ஹர்திக்குக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்காத ரோஹித் ஷர்மா ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார். இதன் மூலம் முதல் முறையாக தன்னுடைய ஆதரவை ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments