Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடக்க ஆரம்பித்த ரிஷப் பண்ட் – முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (09:16 IST)
ரிஷப் பண்ட் சமீபத்தில் விபத்தில் சிக்கி அறுவை  சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் இப்போது நடக்க தொடங்கியுள்ளார்.

கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அறுவை சிகிச்சை முடிந்து முதல் முதலாக ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் புகைப்படத்தை வெளியிடவே, ரசிகர்கள் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வரவேண்டும் என ஆசைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments