Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 வரலாற்றிலேயே எந்த அணியும் படைக்காத சாதனையை படைத்த ஆர் சி பி!

vinoth
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:57 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி டி 20 வரலாற்றின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி பவர்ப்ளேவிலேயே சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த தவறியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் 287 என்ற புதிய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை சன்ரைசர்ஸ் படைத்தது. டி 20 வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை ஆர்சிபி நெருங்கியிருந்தபோது விராட்கோலி 42 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்கள் வரை வந்தவர் அதிர்ச்சிகரமாக விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்தது.

இதன் மூலம் இதுவரையிலான டி 20 போட்டி வரலாற்றில் சேஸிங் செய்யும் போது ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக சாதனையைப் படைத்துள்ளது ஆர் சி பி. மேலும் இந்த போட்டியில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி 20 போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: 6 அணிகளுக்கு அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments