Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடெஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரம் ஆகஸ்ட் 1இல் விசாரணை - ஐசிசி

Webdunia
புதன், 23 ஜூலை 2014 (17:08 IST)
ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன் மோதல் தொடர்பாக வரும் ஒன்றாம் தேதி(01-08௨014) விசாரணை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, மைதானத்தில் இருந்து வெளியே வந்த ஜடேஜாவை, ஆண்டர்சன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீதான மோதலை விசாரிக்க தனி விசாரணை ஆணையத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ளது.
 
விசாரணை தொடங்கிய 48 மணிநேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது. விசாரணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுவதால், வரும் 27 ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பங்கேற்க எந்தவித சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது.
 
ஒருவேளை விசாரணை முடிவில் ஆண்டர்சன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் அந்த வீரரை எடுங்கள்.. சிஎஸ்கே அணிக்கு அறிவுரை சொன்ன தோனி!

மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணியில் இந்த ஸ்டார் ப்ளேயர் இல்லையா?

அணிதான் முக்கியம்… தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்த ஷுப்மன் கில்!

ரிஷப் பண்ட் மட்டும் ஏலத்துக்கு வந்தால்…? ஆகாஷ் சோப்ரா சொன்ன தொகை!

நாயகன் மீண்டும் வர்றான்… கேப்டன் பதவியை ஏற்கிறாரா கோலி?

Show comments