Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருக்கை நுனியில் அமரவைத்த த்ரில்லர் போட்டி… சம்பவம் செய்த ரஷீத் கான் – ராஜ்ஸ்தானுக்கு முதல் தோல்வி!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:00 IST)
17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி பரபரப்பாக கடைசி பந்து வரை சென்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் ஜெய்ஸ்வால் 24 ரன்னும், பட்லர் 8 ரன்னும், சேம்சன் 68 ரன்னும், பராக் 76 ரன்னும், அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து, குஜராத்திற்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதன் பின்னர் ஆடிய குஜராத் அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடியது. இதனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் நிலையே இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் அந்த அணி வீரர்களான ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அந்த ஓவரில் ரஷீத் கான் முதல் மற்றும் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இதற்கிடையில் ராகுல் தெவாட்டியா அவுட் ஆக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது.  அந்த பந்தில் ரஷீத் கான் பவுண்டரி அடிக்க குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவாஸ்கர் அப்படி பேசியிருக்கக் கூடாது… ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ஆஸி.வீரர்!

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments