Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் வெற்றிநடை போடும் ராஜ்ஸ்தானுக்கு தோல்வியைப் பரிசாக அளிக்குமா குஜராத்?

vinoth
புதன், 10 ஏப்ரல் 2024 (09:55 IST)
17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடக்கும் 24 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கிறது.இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 ல் மற்றும் வென்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் ஜோஸ் பட்லர் ஆர் சி பிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பி சதம் அடித்தார். இன்னும் ஜெய்ஸ்வால் சரியான இன்னிங்ஸை ஆடவில்லை.

குஜராத் அணியைப் பொறுத்தவரை ஷுப்மன் கில்லைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடுவதில்லை. பவுலிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த போட்டியில் மீண்டெழுந்து மூன்றாவது வெற்றியைப் பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments