Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசிப் பந்தில் ரெய்னா அணி த்ரில் வெற்றி; 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2016 (12:51 IST)
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி த்ரில் வெற்றி பெற்றது.
 

 
ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
 
இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பார்த்திவ் பட்டேல் 34 ரன்களும், டி சவுதி 25 ரன்களும் எடுத்தனர்.
 
அம்பதி ராயுடு மற்றும் குருனல் பாண்டியா ஆகியோர் தலா 20 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் தவல் குல்கர்னி மற்றும் பிரவின் தாம்பே இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் சொதப்பினர். 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுரேஷ் ரெய்னா 20 ரன்களிலும், அக்ஷ்தீப் நாத் 12 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிபெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

Show comments