Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசுர வேகத்தில் இந்தியா –பிருத்வி ஷா அதிரடி அரைசதம்.

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (11:47 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் ச்சேஸ்ஸின் அபார சதத்தால் 311 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரோடு 52 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் 4 ரன்களில் ஹோல்டரின் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவரையடுத்து வந்த புஜாரா 9 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments