இந்தியாவ பைனல்ல எதிர்கொள்ள விரும்புறோம்… பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் கருத்து!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (08:35 IST)
டி 20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் ஆளாக சென்றுள்ளது.

சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதலில் வெல்லும் அணி ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.  இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான மேத்யு ஹெய்டன் “இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் கடந்த 2007 ஆம் ஆண்டு மோதின. அப்போது இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments