Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

vinoth
செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:48 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நின்றது. அரசியல் காரணங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதாம். இது சம்மந்தமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கைவிடப்படுமா அல்லது வேறு நாட்டில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments